அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
நபிமொழி : 006 - NABIMOZI - 006
அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நரகம், மனோ இச்சைகளால் திரையிடப்பட்டுள்ளது. சொர்க்கம், கஷ்டங்களால் திரையிடப்பட்டுள்ளது என்று நபி(ஸல்) கூறினார்கள். ' (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 101) ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'(உணவை உண்டு முடித்ததும்) விரல்களையும், தட்டையும் நன்கு சுத்தம் செய்து (சாப்பிட) கட்டளையிட்ட நபி(ஸல்) அவர்கள், ''நீங்கள் அந்த உணவில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அறிய மாட்டீர்கள்' என்று கூறினார்கள். (முஸ்லிம்).
முஸ்லிமின் மற்றொரு அறவிப்பில் கீழ்கண்டவாறு ஹதீஸ்கள் உள்ளது:
1) 'உங்களில் ஒருவரின் ஒரு பருக்கை உணவு கீழே விழுந்து விட்டால், அதை அவன் எடுக்கட்டும்! அதில் உள்ள அசுத்தத்தை நீக்கட்டும். பின்பு அதை சாப்பிடட்டும்! ஷைத்தானுக்காக அதை விட்டு விட வேண்டாம். தன் விரலை சூப்பி சுத்தம் செய்யும் முன் தன் கையை துண்டில் துடைக்க வேண்டாம். நிச்சயமாக தன் உணவில் எதில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்.
2) நிச்சயமாக ஷைத்தான், உங்கள் ஒவ்வொரு செயலின் போதும் ஆஜராகிறான். இதுபோல் ஒருவர் சாப்பிடும் போதும் ஆஜராகிறான். உங்கள் ஒருவரிடமிருந்து ஒரு பருக்கை விழுந்துவிட்டால், அதில் உள்ள அசுத்தத்தை(தூசியை) நீக்கி விட்டு, சாப்பிடட்டும்! ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம் என நபி(ஸல்)கூறினார்கள்.' ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 164)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் '' |
No comments:
Post a Comment